லண்டனில் டபுள்டக்கர் பேருந்து ஒன்று மரத்தின் உயரமான கிளை ஒன்றில் மோதியதன் காரணமாக திடீரென ஒருசில நொடியில் சிங்கிள்டக்கர் பேருந்தாக மாறியது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தார்கள். காயமடைந்த அனைவரும் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லண்டனில் உள்ள கிங்ஸ்வே பகுதியில் டபுள்டக்கர் பேருந்து ஒன்று சுமார் 400 பயணிகளுடன் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தை சாலையின் ஓரத்தில் செல்ல ஆரம்பித்தது. இதனால் பெரிய மரம் ஒன்றின் கடினமான கிளையில் பேருந்து மோதி பேருந்தின் மேல்பாகம் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. மேல்பகுதியில் பயணம் செய்த 5 பயணிகள் படுகாயமும், ஒருசிலர் லேசான காயமும் அடைந்தனர்.
இந்த விபத்து நடந்த பேருந்தை பார்க்கும்போது பேருந்து வெடிகுண்டால் தாக்கப்பட்டது போல இருந்ததாக கூறப்படுகிறது. சாலையின் நடுவில் பேருந்தின் பாகங்கள் சிதறிக்கிடந்தது. இந்த விபத்து குறித்து லண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.