நடிகை ரம்பாவின் சகோதரர் மனைவி பல்லவி, ரம்பா மீதும் தனது கணவர் சீனிவாசராவ் மீதும் வரதட்சணை புகார் ஒன்றை ஐதராபாத் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த ஐதராபாத் நீதிமன்றம் ரம்பா மீதும், அவருடைய அண்ணன் சீனிவாசராவ் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
நடிகை ரம்பாவின் அண்ணன் மனைவி ஐதராபாத்தில் உள்ள கோர்ட்டில் ஒரு மனு கொடுத்திருக்கின்றார். அதில் தனது கணவர் சீனிவாசராவும், கனடாவில் வாழும் ரம்பாவும் சேர்ந்து தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் கடந்த சில வருடங்களாக தான் தனியாக வாழ்ந்து வருவதாகவும், கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த ஐதராபாத் நீதிமன்றம் ரம்பா மீதும், அவருடைய அண்ணன் சீனிவாசராவ் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி ஐதராபாத் போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை ரம்பா மீதும், அவருடைய அண்ணன் சீனிவாசராவ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரம்பாவின் அண்ணன் சீனிவாசராவ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
“என் தங்கை ரம்பா மீதும் என் மீதும், என் மனைவி பல்லவி பொய்ப் புகார் கொடுத்துள்ளார். எனக்கும், என் மனைவி பல்லவிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். என் தங்கை ரம்பா 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு கணவர்-குழந்தையுடன் கனடாவில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பின்னர் ரம்பா ஒருமுறை கூட இந்தியாவுக்கு வரவில்லை. உண்மை இப்படியிருக்கும்போது பல்லவியிடம் அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார் என்று கூறுவது சுத்தப்பொய்.
இவ்வாறு சீனிவாசராவ் கூறினார்.