மன்னரின் திருவிழாவுக்கு வந்த 38 இளம்பெண்கள் பலி. சுவாசிலாந்து நாட்டில் சோகம்

மன்னரின் திருவிழாவுக்கு வந்த 38 இளம்பெண்கள் பலி. சுவாசிலாந்து நாட்டில் சோகம்

[carousel ids=”70828,70829,70830,70831″]

சுவாசிலாந்து நாட்டு மன்னர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற இளம்பெண்கள் சாலை விபத்து ஒன்றில் சிக்கி 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதால் அந்த நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு சிறிய நாடு சுவாசிலாந்து. மன்னராட்சி நடைபெற்றும் வரும் இந்த நாட்டை  ஆட்சி செய்பவர் மன்னர் மஸ்வாதி-III.  அந்த நாட்டில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புரதாண விழா ஒன்று நடைப்பெறும். அதில் நாட்டின் அழகிய பெண்கள் கலந்துக்கொண்டு நடனம் ஆடுவார்கள். அந்த பெண்களில் ஒருவரை மன்னர் தனது புதிய மனைவியாக தேர்வு செய்வார். இந்த விழாவில் கலந்து கொள்ள நாடும் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் வருகை தந்து கொண்டிருந்தனர்.

நாளை நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள, ஒரு லாரியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் சென்ற போது, அந்த லாரியானது அம்பபான் மற்றும் மஞ்சினி நகரங்களுக்கு இடையே விபத்தில் சிக்கியது. இதில் 38 பெண்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து காரணமாக திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அனைவரும் சோகமாகியுள்ளனர்.

Leave a Reply