பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எழுந்த ஏராளமான புகார்களை தொடர்ந்து அந்த பகுதியின் முனிசிபல் நிர்வாகம் நேற்று நாய்களை வேட்டையாடியது.
நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கான நாய்களை கொன்று சாலையில் ஓரத்தில் குவிக்கப்பட்டது. அதன்பின்னர் நாய்களின் உடல்கள் டிஸ்போஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கராச்சி நகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களை திடீர் திடீரென தாக்கி வந்தது. இதில் குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட தீர்மானம் செய்த கராச்சி பகுதியின் முனிசிபாலிட்டி நேற்று அதிரடியாக நடவடிக்கையாக நாய்களை பிடித்து வேட்டையாடினர். இந்த வேட்டையை கூட்டம் கூட்டமாக நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
தற்போது கராச்சி பகுதி மக்கள் தைரியமாக சாலையில் நடந்து செல்வதாக கூறப்படுகிறது. முனிசிபல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். ஆனால் விலங்குகள் பாதுகாப்பு இயக்கம் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.