விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம் மாபெரும் ஹிட் ஆனதை தொடர்ந்து அந்த படத்தை தெலுங்கில் தயாரிக்க அதன் இயக்குனர் நளன் குமாரசாமி முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க டாக்டர் ராஜசேகர் விருப்பம் தெரிவித்ததோடு, அவரே இந்த படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் ராஜசேகர் விஜய் சேதுபதியின் வேடத்தை மேக்கப் இல்லாமலேயே நடிக்க இருக்கின்றாராம். தமிழில் நடித்த சஞ்சிதா ஷெட்டியே தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
நளன் குமாரசாமியே தெலுங்கிலும் இயக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.