பாமக நிறுவனர் டாக்டர் ரமதாஸ் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு தனது மனைவியுடன் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமது பேத்தியின் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதிக்கு வழங்கி, திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் அரசியல் நாகரீகம் குறைந்து வருகிறது. அதனை எப்போதும் விடாமல் கடைபிடிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எங்களது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறினார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து எதுவும் பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். பாமக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.