‘திராவிட நாடு’ டிரெண்டிங் மட்டுமல்ல, பாஜகவுக்கு எச்சரிக்கை. ஜெ.அன்பழகன்
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டம், இதுவரை கருத்துவேறுபாடுகளுடன் இருந்த தமிழக, கேரள மக்களையும் ஒன்றிணைத்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கை டுவிட்டரில் வலுத்து வருகிறது. இதற்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெரும் ஆதரவு கிடைத்ததால் இரண்டு நாட்கள் டிரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில் இந்தியா ஒன்றிணைந்து இருப்பதும், திராவிட நாடு என தனியாக பிரிவதும் மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகஃளில் தான் இருக்கின்றது என்று டுவிட்டர் பயனாளிகள் பொங்கி எழுந்துள்ளனர்.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறியபோது, ‘திராவிடநாடு என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆவதை பாஜக சாதாரண விசயமாகக் கருதக்கூடாது. இது வெறும் தொடக்கம்தான். மதவாத கருத்துகளையும், இந்துத்துவா சிந்தனைகளையும் அமல்படுத்துவதை பாஜக இனி கைவிட வேண்டும். அதற்கான எச்சரிக்கையே திராவிட நாடு டிரெண்டிங்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மாணவ அமைப்பின் பிரதிநிதிகள், மாட்டிறைச்சிக்கு விதித்த தடையை திரும்பப் பெறாவிட்டால், திராவிடநாடு கோருவோம் என கருத்து கூறிவருவதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.