தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.
இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குறிப்பிட்ட கல்வித் தகுதியுடன் ஓட்டுநர், நடத்துநர் உரிமங்கள் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். அதோடு, 1.7.2014 அன்றைய நாளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு 45 வயதிற்குள்ளும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
முன்னுரிமையுடையோர்: ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-அனைவரும், ஆதிதிராவிடர்(கலப்பு திருமணம்)-28.8.2012, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தோர்)-25.10.2013, பிற்படுத்தப்பட்டோர்(கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தோர்)-20.12.2011, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்)-அனைவரும், பொதுப்பிரிவு(கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தோர்)-அனைவரும், பழங்குடியினர்-அனைவரும்.
முன்னுரிமையற்றோர்: ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-26.3.2002, ஆதிதிராவிடர்-23.4.1998, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-17.5.2000, பிற்படுத்தப்பட்டோர்-28.6.1999, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்)-20.5.2002, பொதுப்பிரிவு-20.12.2000 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.
நடத்துநர் பணிக்கு: இப்பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துனர் உரிமம் பதிவு செய்து 1.7.2014 அன்றைய நாளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும் மற்ற பொதுப்பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
முன்னுரிமையுடையோர்: ஆதிதிராவிடர்(அருந்ததியர்)-அனைவரும், ஆதிதிராவிடர்(கலப்பு திருமணம்)-8.7.2010, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தோர்)-27.3.2014, பிற்படுத்தப்பட்டோர்(கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தோர்)-10.5.2011, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்)-அனைவரும், பொதுப்பிரிவு(கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தோர்)-11.4.2014, பழங்குடியினர்-அனைவரும்.
முன்னுரிமையற்றோர்: ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-20.6.1997, ஆதிதிராவிடர்-4.10.1995, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-17.1.2001, பிற்படுத்தப்பட்டோர்-21.8.2001, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்)-14.10.2009, பொதுப்பிரிவு-4.11.1997 வரையிலும் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பெற்று பதிவு செய்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஓட்டுநர், நடத்துனர் பணிக்கான உரிமங்கள், அனைத்து அசல் கல்வி சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 19-ம் தேதி நேரில் வந்து பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை நேரில் அறிந்து கொள்ளலாம். மேலும் தாமதமாக வருவோரின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.