பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்முறையாக வித்தியாசமான பாதுகாப்பு முறை

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்முறையாக வித்தியாசமான பாதுகாப்பு முறை

droneராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54-ஆவது குருபூஜை மற்றும் 109-வது ஜெயந்தி விழா கடந்த வெள்ளியன்று தொடங்கியது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில் இந்த விழாவுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் முதல்முறையாக அதிநவீன ஆளில்லாத விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

கீழச்செவல்பட்டி, காரைக்குடி உட்பட 4 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் பல சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Leave a Reply