ஜப்பான் பிரதமர் அலுவலக மாடியில் இறங்கிய ஆளில்லா உளவு விமானம். பெரும் பரபரப்பு.

japan droneஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வந்து இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபெ தற்போது ஆசிய ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேஷியா சென்றுள்ளார். இந்நிலையில் அவரது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இன்று அதிகாலை ஆளில்லாத சிறிய ரக விமானம் ஒன்று வந்திறங்கியதால் பிரதமர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக விமானம் 1.7 அடி அகலமே உள்ளது என்றும் அதன் உள்ளே நவீன தொழில்நுட்பம் உள்ள கேமரா ஒன்று இருந்ததாகவும் மேலும் ஒருசில உளவு பார்க்கும் கருவிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் அலுவலகத்தை உளவு பார்க்கவே இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply