நீரிழிவுக்கு மருந்தாகும் சீந்தில்

1-350x250

அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தகொடி என்று பல்வேறு பெயர்களை தாங்கி நிற்கும் சீந்தில் கொடி வகையை சேர்ந்தது. இதில் சீந்தில், பொற்சீந்தல், பேய்சீந்தில், என்று பல வகைகள் உண்டு. நீரிழிவுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோய், மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, சிறுநீரக செயல் இழப்பு. ஆண்மை, தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு அருமருந்தாக விளங்குகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தானாகவே படர்ந்து வளர்கிறது.

பார்ப்பதற்கு வெற்றிலை போன்று தோற்றமளிக்கும். நாட்பட்ட சிறுநீர்ப்பையின் கோளாறுகளுக்கு சீந்தில் சர்க்கரை 1 கிராம் முதல் 4 கிராம் வரை காலை மாலை சாப்பிட நோய் நீங்கும். சீந்தில் சர்க்கரையை எடுத்து அதில் இரண்டு சிட்டிகை அள்ளி வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். சிறிது கசப்பாய் இருக்கும். தொடர்ந்து குடித்து வந்தால் யானைத்தோல் போன்ற சொறியும் கபநோய்களும் குணமாகும்.

சர்க்கரைநோய் என்று அழைக்கப்படும் நீரிழிவுநோய் உள்ளவர்கள், சீந்தில் சர்க்கரையை காலை, இரவு நேரங்களில் உணவுக்கு பின் ஒரு கிராம் அளவில் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நீங்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் கை, கால் அசதிக்கும், மிகு தாகம், உடல் மெலிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சீந்தில் பொடியை காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் கலந்து குடித்து வந்தால் மேற்சொன்ன பிரச்சனைகள் நீங்கும். சீந்தில் கொடியை நன்றாக சிதைத்து 34 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் கொத்துமல்லி, அதிமதுரம் வகைக்கு 4 கிராம் 300 கிராம் சோம்பு, பன்னீர்ப்பூ வகைக்கு 15கிராம் 350 மிலி தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேளைக்கு 25மிலி முதல் குடித்து வந்தால் முறை சுரம், உப்பிசம், நாட்பட்ட செரியாமை வயிற்று கோளாறுகள் நீங்கும். உடலுக்கு வலிமை தரும். சீந்தில் தண்டு கடுக்காய், சிதைவேர், களிப்பாக்கு சுக்கு, கடுகுரோகணி, கற்றாழைச்சருகு இவற்றை ஒரே அளவாக எடுத்து போதுமான தண்ணீர்விட்டு எட்டில் ஒன்றாக குறுக்கி எடுத்து குடிக்க மாந்தசுரம், நீங்கி கழிச்சல் ஏற்பட்டு உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு கைகால் விரல்களில் சுருக்கென்று குத்தும் வலி ஏற்படும். இவர்கள் சீந்தில் கொடியின் சர்க்கரையை ஒரு சிட்டிகை எடுத்து மூன்று வேளையும் உணவுக்கு பிறகு தண்ணீர் கலந்து குடித்து வந்தால் வலி நீங்கும். சீந்தில் பற்படாகம், சந்தானம், விலாமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைகிழங்கு, இந்த கடை சரக்குகளை வகைக்கு 30கிராம் அளவில் எடுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து தண்ணீர்விட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு காய்ச்சி குடிக்க பித்த சுரம் போகும். சீந்தில் பொடியை உணவு பத்தியத்துடன் மூன்று வேளையும் சாப்பிட பெண்களின் மார்பக புற்றுநோய் முற்றிலும் குணமாகும். 

பார்க்கும் இடமெங்கும் படர்ந்து கிடக்கும் சீந்தில் யாரும் சீண்டாமலேயே இருப்பதை கண்ட நமது முன்னோர்கள் இதன் பயனையும் பயன்படுத்தும் முறையுடன் சொல்லி வைத்தார்கள் அவர்கள் காட்டிய வழியில் தகுந்த வழிகாட்டிகளின் துணையுடன் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

சீநதில் சர்க்கரை

நன்றாக முற்றியகொடியை நறுக்கி இடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி குளிர்ந்த நீரை விட்டு மறுநாள் கடைந்து திப்பியை கசக்கி பிழிந்து நீக்கிவிட்டு வெயிலில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் வைக்க நீர் தெளியும். அந்த நீரை வடிகட்டி வேறு நீர் விட்டு கலக்கி மேற்கண்டபடியே நீரை வடிகட்டி சுண்டவிட்டு மறுபடியும் இதேபோல் ஒருமுறை செய்து நீரை வடித்து விட்டு அடியில் படிந்திருக்கும் மாவுதான் சீந்தில் சர்க்கரை, பளிச்சிடும் தன்மையுடன் வெண்மையான பொடி சேகரித்து காற்று புகாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply