மதுபோதையில் விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த போதை ஆசாமி ஒருவர் பயணிகளுக்கு நடுவே அநாகரீகமாக சிறுநீர் கழித்த குற்றத்திற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிகளுக்கு மது வழங்கப்பட்டது. ஜினு ஆபிரகாம் என்ற 39 வயது நபர் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து போதையில் செய்வதறியாது விமானத்தின் நடுவில் பயணிகள் இருக்கை அருகிலேயே சிறுநீர் கழித்தார். இதனால் சக பயணிகள் முகம் சுளித்தனர்.
உடனடியாக விமான ஊழியர்கள் அவரை பிடித்து அவருடைய கைகளை கட்டி உட்கார வைத்தனர். விமான பிர்மிங்காம் நகருக்கு சென்றவுடன் அவர் விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்திய மதிப்பில் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.