டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் புலிகள் இருக்கும் பகுதியில் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த போதை நபர் ஒருவரை அங்கிருந்த புலி ஒன்று அடித்து கொன்றது. இதனால் அந்த மிருகக்காட்சி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மிருகக்காட்சி சாலையில் நேற்று 22 வயது மக்சூத் என்பவர் குடிபோதையில் புலிகள் இருக்கும் பகுதியில் இருந்த சுமார் 18 அடி சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்தார். அந்த நபரை கண்டதும் புலி அவர் அருகில் வந்து அவருடைய கழுத்தை வாயினால் கவ்வி இழுத்து சென்றது. சில நிமிடங்கள் உயிருக்காக போராடிய மக்சூத், பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர காட்சியை அந்த மிருக்காட்சி சாலைக்கு வந்த ஒருசிலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.