விஷ்ணுப்ரியா தோழி டிஎஸ்பி மகேஸ்வரி திடீரென மருத்துவமனையில் அனுமதி

விஷ்ணுப்ரியா தோழி டிஎஸ்பி மகேஸ்வரி திடீரென மருத்துவமனையில் அனுமதி
maheswari
கடந்த 18ஆம் தேதி திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்ட பரபரப்பே இன்னும் தமிழகத்தில் அடங்காத நிலையில் விஷ்ணுப்ரியாவின் நெருங்கிய தோழியும், கடலாடி டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி புதுச்சேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஷ்ணுப்ரியா தற்கொலை குறித்து சமீபத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வந்த அவரது தோழி மகேஸ்வரியிடம் இன்று இந்த வழக்கை விசாரணை செய்து வரும்  சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மெடிக்கல் விடுமுறை எடுத்துக்கொண்ட டி.எஸ்.பி மகேஸ்வரி, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோதத்துவ சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு என்ன பிரச்னை, எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்ற விவரங்களை பத்திரிகைகளுக்கு தெரிவிக்க ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply