உலகின் பிசியான விமான நிலையம். லண்டனை பின்னுக்கு தள்ளியது துபாய்.

dubai airportஇதுவரை உலகின் மிகவும் பிசியான விமான நிலையம் என்ற பெயர் பெற்றிருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை துபாய் விமான நிலையம் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் துபாய் விமான நிலையத்திற்கு மொத்தம் 70.5 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆனால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் 68.1 மில்லியன் பயணிகள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் விமான நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 66.4 மில்லியன் பயணிகள் மட்டுமே வந்திருந்த நிலையில் ஒரே வருடத்தில் சுமார் 6% பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 2015ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்திற்கு 79 மில்லியன் பயணிகள் வருகை புரிய வாய்ப்பு இருப்பதாக துபாய் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Leave a Reply