வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடலூர் , புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
இன்னும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.