ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை. இலங்கையில் பரபரப்பு.

ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை. இலங்கையில் பரபரப்பு.

2கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா என்பவரது வழக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகர் டுமின்ந்தா சில்வா உள்பட ஐந்து பேர்களுக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது முன் விரோதம் காரணமாக பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் அமைச்சராகவும், ராஜபட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவரும் ஒருவர் என்பது அனைவரும் தெரிந்ததே.

2012-ம் ஆண்டே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் கடந்த ஆண்டு ராஜபட்சே தேர்தலில் தோல்வி அடைந்த தூசு தட்டப்பட்டு விசாரணை விறுவிறுப்புடன் நடந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற ஐவரும் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது

Leave a Reply