குற்றமே செய்யாத நெதர்லாந்து; அலுவலகமாக, ஹோட்டலாக மாறும் சிறைச்சாலைகள்…!

குற்றமே செய்யாத நெதர்லாந்து; அலுவலகமாக, ஹோட்டலாக மாறும் சிறைச்சாலைகள்…!

காலியுள்ள சிறைகளை, வேறு நாடுகளுக்கு வாடகைக்கு விடும் பணியில் நெதர்லாந்து ஈடுபடுகிறது.

ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. அந்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு. அதனால் அங்குள்ள சிறைகள் அனைத்தும் காலியாக கிடக்கின்றன. இதையடுத்து சிறை வளாகங்களை அரசுப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பிரேடா சிறையில் மட்டும் 90க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன. குறிப்பாக பெண்கள் சிறை உணவு விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிகச்சிறப்பான செயல்பாட்டிற்காக, அந்த உணவு விடுதி ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, நெதர்லாந்து நாட்டில் பெருமளவு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் 27 சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில சிறைச்சாலைகள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. சில சிறைச்சாலைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

Leave a Reply