200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத டைனோசர் எலும்புகள் கண்டுபிடிப்பு
இங்கிலாந்து நாட்டில் உள்ளவேல்ஸ் பகுதியில் பெனார்த் என்ற இடத்தில் ஒரு ராட்சத மிருகத்தின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடைத்துள்ளதாகவும், இந்த எலும்புகள் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் வகையை சேர்ந்த விலங்குகளின் எலும்புகள் என்றும் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
‘டிரகோரேப்டர் ஹானிசான் என்றழைக்கப்படும் அந்த டயனோசரஸ் வகை விலங்குகள் வாயில் இருந்து தீப்பிழம்பை கக்க கூடிய தன்மை உடைய ராட்சத உருவம் கொண்ட விலங்குகள் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள University of Portsmouth என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் David Martill என்ற ஆராய்ச்சியாளரின் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இங்கிலாந்து நாட்டின் தேசிய வேல்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.