மின்வணிக செயலி

app_2627949f

இ-காமர்ஸ் எனப்படும் இணைய‌வணிக யுகத்தில் நீங்களும் பங்கேற்கலாம். வாடிக்கையாளராக மட்டும் அல்ல, விற்பனையாளராகவும்தான்! இணைய‌வணிக தளங்கள் மூலம் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக உங்கள் தயாரிப்புகளை நீங்களே விற்பனை செய்யலாம்.

நீங்கள் வடிவமைத்த ஆடைகள், உருவாக்கிய பொருட்கள் என எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். இதற்கு ஒளிப்படத்துடன் உங்கள் தயாரிப்பின் சிறப்பை விவரித்தாலே கூட போதுமானது. ஒளிப்படத்தை ஸ்மார்ட்போனிலேயே எடுத்துவிடலாம்தான். ஆனால் இணைய‌வணிக விற்பனைக்காகப் படம் எடுக்கச் சரியான முறை ஒன்று இருக்கிறது தெரியுமா?

அதாவது, பின்னணி விவரங்கள் இல்லாமல் விற்பனைப் பொருள் மட்டுமே தெரியும் வகையில் படம் இருந்தால் நல்லது. அந்தப் பொருளை மட்டும் கத்திரித்து எடுத்து வெள்ளைக் காகிதத்தில் ஒட்டியதுபோல இருக்க வேண்டும். அப்போதுதான் விற்பனைப் பொருள் பளிச்செனத் தெரியும். காண்பவர்களையும் ஈர்க்கும்.

இத்தகைய படத்தை எடுப்பது எப்படி என்று கவலைப்பட வேண்டாம். அதற்காகவென்றே ‘பிராடக்ட் கேமரா’ (Product Camera) செயலி அறிமுகமாகியுள்ளது. பின்னணிக் காட்சி இல்லாமல் விற்பனைப் பொருள் மட்டும் தோன்றும் வகையில் இந்தச் செயலி மூலம் ஒளிப்படத்தை கிளிக் செய்து கொள்ளலாம். இணைய‌வணிகத்திற்குத்தான் என்றில்லை. நீங்கள் உருவாக்கிய படைப்புகளை, புதிதாக வாங்கியப் பொருட்களை சமூக வலைத்தளங்களில் ஒளிப்படமாகப் பகிர்ந்து கொள்ளவும் இந்தச் செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.productstudio.android

Leave a Reply