இந்திய வனத்துறை சேவைக்கான பொதுத் தேர்வு வரும் நவம்பர் 21 ஆம் தேதி எட்டு மையங்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தவுள்ளது. இதற்கான இ-நுழைவு சீட்டை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது யுபிஎஸ்சி.
விண்ணப்பதாரர்கள் தங்களின் இ-நுழைவு சீட்டையை http://www.upsc.gov.in. என்ற இணையதளத்தில் பதிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத வரும்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில், தங்களின் இ-நுழைவு அட்டையை காண்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஒன்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நுழைவு சீட்டு எதுவும் எடுத்துச் செல்ல தேவையில்லை.
விண்ணப்பதாரர்கள் சிரமங்களை சந்தித்தால் யுபிஎஸ்சியின் சேவை மையத்தில் நேரிலோ அல்லது 23381125, 23098543, 23385271 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.