இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார்? இளங்கோவனுக்கு தமிழிசை பதிலடி.

tamilisaiதமிழர்களுக்கு துரோகம் செய்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மிகப்பெரிய துரோகம் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறிய கருத்துக்கு தற்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி செய்ததுதான் துரோகம் என்றும், மோடியின் வருகையால் அங்குள்ள தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும், நம்பிக்கையுடனும் இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் மோடியின் பயணத்தால் பல நல்ல திட்டங்கள் உருவாகியுள்ளதாகவும், அதை நல்ல மனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் பிரதமர் மீது குற்றம் சொல்வதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

Leave a Reply