ஜெயலலிதாவின் மவுனத்தில் மர்மம் இருக்கின்றது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி

ilangovanஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 20 தமிழர்கள் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீஸார்களால் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து அனைத்து தமிழக கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதலவ்ர் பன்னீர் செல்வமும் கண் துடைப்பு அறிக்கை விட்டதோடு, மவுனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சென்னை சத்திய மூர்த்டி பவனில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், “தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஆந்திர வனப் பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஆந்திர மாநில காவல்துறையினர் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுகின்றனர். இதில் பல முரண்பாடுகள் உள்ளன. 20 தொழிலாளா;கள் 10 சதுர அடிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஒரு காவல் துறையினருக்கு கூட எந்த காயமும் ஏற்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட 20 தொழிலாளா;களில் பெரும்பாலானோர் துப்பாக்கி சூட்டிற்கு முன்பாக அடித்து துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் உடலில் இருப்பதாக கூறப்படுகின்றன.

ஏப்ரல் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு 7-ம் அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்து 6 நாட்களாகியும் இதுவரை உடற்கூறு பரிசோதனை வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் நிகழ்ந்த போது 150 தொழிலாளர்கள் அங்கே இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். அதில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படாமல் 20 தொழிலாளா;கள் மட்டும் எப்படி படுகொலை செய்யப்பட்டனர்?

எனவே, ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையை நிகழ்த்த ஆணையிட்ட ஆந்திர காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். இப்படுகொலை இரு மாநிலம் சம்மந்தப்பட்டதாக இருப்பதால் மத்திய புலனாய்வுத்துறை தான் விசாரிக்க வேண்டும். மாநில காவல்துறை விசாரணை செய்தால் குற்றம் செய்த காவல்துறையினர் தப்புவிக்க வழி ஏற்படும். இப்படுகொலை குறித்து ஜெயலலிதாவும், பன்னீர் செல்வமும் கண் துடைப்பு அறிக்கை விட்டதோடு, மவுனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன். குறிப்பாக எதிர்க்கட்சிகளின் சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை குறித்து மாநில அரசின் கருத்து என்னவென்று தெரியவில்லை”

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Leave a Reply