8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு.

பிரிட்டன் நாட்டின் நார்போக் என்ற பகுதியில் உள்ள கடல்பகுதியில் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த கால்தடத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை இந்த பகுதிகளில் விலங்குகளின் கால் தடங்கள் மற்றும் எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் தற்போது முதன்முறையாக மனிதனின் காலடி தடம் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களைன் கால்தடங்களை வைத்து பார்க்கும்போது, வடக்கு ஐரோப்பியாவில் வாழ்ந்த மூதாதையர்களின் கால்தடம் என அறிய முடிகிறதாக கூறப்படுகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 50 கால்தடங்கள் தற்போது கிடைத்துள்ளன என்றும், தற்போது தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கடல்நீர் உள்வாங்கியுள்ளதால் இந்த கால்தடங்கள் தெரிவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காலடி தடங்களை வைத்து பார்க்கும்போது ஆதிகால மனிதன் சுமார் 3 அடி முதல் 5அடி 7 அங்குலம் வரை இருந்திருக்கலாம் என்றும், ஒரு குடும்ப அமைப்பாக கூட்டமாக அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply