அயர்லாந்து நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருவதாகவும், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாம் என 70%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே அயர்லாந்து நாடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என கடந்த 20 வருடங்களுக்கு முனே சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது முதல் முறையான ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் சுமார் 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர். இன்று காலை ஒன்பது மணிக்கு வாக்குகள் எண்ண ஆரம்பமாகியுள்ளது.
பெரும்பாலான வாக்குகள் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர்தான் அதிகாரபூர்வமாக முடிவு அறிவிக்கப்படும். இதன்படி வாக்கெடுப்பு மூலம் உலகிலேயே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஒப்புதல் கோரிய முதல் நாடு என்ற பெருமை அயர்லாந்துக்கு கிடைத்துள்ளது.