ஜப்பானில் பயங்கர பூகம்பம். சுனாமியும் தாக்கியதால் பரபரப்பு
கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கிருந்த அணு மின் நிலையத்தை சுனாமி அலைகள் தாக்கின. இதில் மூன்று உலைகள் பாதிப்படைந்தததோடு ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்ததனர்.
இந்நிலையில் சரியாக 5 வருடங்கள் கழித்து மீண்டும் சுனாமி இந்த பகுதிக்கு வந்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு பூகம்பம் காரணமாக புகுஷிமா அணு உலை பகுதி அருகே சுனாமி தாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது
டோக்கியோவுக்கும் ஃபுகுஷிமாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் 25 கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஃபுகுஷிமா அணு உலையை ஒரு மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியதாகவும் இதன் காரணமாக அணு உலையின் வாட்டர் கூலிங் சிஸ்டம் தானாகவே நின்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.