சிலி நாட்டில் இன்று அதிகாலை 8.2 ரிக்டேர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டம் உண்டாகியுள்ளது. சிலி நாட்டில் உள்ள Iquique என்ற நகரத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இதுவரை 5 பேர் பலியானதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த பயங்கர பூகம்பம் ஏற்பட்ட 45 நிமிடங்களில் சுனாமி போன்று மிகப்பெரிய அலை நகரத்தை தாக்கியுள்ளது. இதனால் Iquique நகரத்தில் கடலோரப்பகுதியில் இருந்த பெண்கள் சிறைச்சாலை ஒன்று நிலைகுலைந்தது. இந்த பரபரப்பில் 300 பெண் கைதிகள் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுனாமி அலை நகரை தாக்கும் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடற்கரை பகுதியில் உள்ள பொதுமக்கள் விளையாட்டு மைதானங்களுக்கு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலி மட்டுமில்லாமல் ஈக்வடார், கொலம்பியா, பனாமா, கோஸ்டா ரிகா மற்றும் நிகாராகா நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1hgHnN5″ standard=”http://www.youtube.com/v/ZHCX_6Z_vM0?fs=1″ vars=”ytid=ZHCX_6Z_vM0&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8673″ /]