ஜப்பானில் இன்று காலை சக்திமிகுந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோ அருகே நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Izu Oshima என்ற தீவுப்பகுதியின் கடலுக்கடியில் 160 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பயத்தில் அலறியபடி கட்டிடங்களைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதுவரை பொருட்சேதங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. 17 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
டோக்கியோவில் இருந்து கிளம்பும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரயில்கள் வேகம் குறைத்து இயக்க ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் சுமர் 18500 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.