தேர்தல் தினத்தில் நிலநடுக்கம். மணிப்பூர் மக்கள் அச்சம்

தேர்தல் தினத்தில் நிலநடுக்கம். மணிப்பூர் மக்கள் அச்சம்

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று முதல்கட்ட தேர்தல் அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் உள்ள சண்டல் என்ற பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது, 3.5 அளவாகப் பதிவானது. இந்த நில அதிர்வு அடங்கி ஒருசில மணி நேரத்தில் இந்தியா-மியான்மர் எல்லையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகியுள்ளது.

தேர்தல் தினத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், மணிப்பூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்திற்கு பின்னர் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படுவதால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply