டெல்லி உள்பட வட மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் பீதி

டெல்லி உள்பட வட மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் பீதி

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.27 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வேகமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக உணரப்பட்டுள்ளது. அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் மேலும் எந்தவித உயிர்சேதமும் நிகழவில்லை என்றும் புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் வடமாநில மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த சூழலில் இன்று காலை 8.13 மணியளவில் மீண்டும் ரோட்டக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply