கல்லீரல் நோய்களை தடுப்பதற்கான எளிய வழிகள்

liver

நம் உடலில் உள்ள இரண்டாவது பெரிய உறுப்பு தான் கல்லீரல். 1-1.5 கிலோ எடையுள்ள கல்லீரல், மேல் வயிற்றின் வலது புறம், விலா எலும்புக்கு பின்னால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. நாம் உண்ணும் மற்றும் குடிக்கும் அனைத்தையும் செயல்படுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றல் திறன் மற்றும் ஊட்டச்சத்துக்களாக மாற்றுவதே இதன் வேலையாகும். கல்லீரலில் வைட்டமின்களும் இருக்கும். உடலின் செயல் இயக்கத்திற்கு தேவையான ஹார்மோன்களையும் இது மெட்டபாலைஸ் செய்யும்.

தன்னை தானே ஆற்றிக்கொண்டு மீண்டும் எழுந்து வரும் ஆற்றலை கொண்டுள்ளது கல்லீரல். அதனால் கல்லீரல் நோய்களும் சத்தமில்லாமல் வளரும். ஆனால் அது வளர்ச்சி அடைந்து விட்டால், 50% உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடிய முற்றிய நிலைக்கு நம்மை தள்ளி விடும். வருடத்திற்கு வருடம் ஏற்படும் மரணங்களுக்கு கல்லீரல் நோய்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சர்க்கரை நோய் மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கு இணையாக உள்ளது கல்லீரல் நோய்களால் ஏற்படும் மரணங்கள்.

கல்லீரல் சம்பந்தமாக 100 நோய்களுக்கு மேல் உள்ளது. ஆனால் இந்த நோய்கள் முற்றிய நிலையை அடையாத வரை, இதற்கான அறிகுறிகள் அவ்வளவாக தெரிவதில்லை. அதனால் அதற்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் கல்லீரல் நோய்களை தடுத்து, ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடலாம்.

கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கொழுப்பு கல்லீரல் நோய், NAFLD (பருமன் மற்றும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் சம்பந்தப்பட்டது) மற்றும் மது சம்பந்தப்பட்ட நோய் போன்ற சில கல்லீரல் நோய்களை நாம் தடுக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. கல்லீரல் நோய்களால் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

கல்லீரலை எப்படி பராமரிப்பது?

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நம் அன்றாட கடமைகளில் முக்கியமானவைகளாகும். இன்றைய நம் வாழ்வு முறையில் உடல் உழிப்பு அதிகம் இல்லாமலேயே போய்விட்டது. இதனால் நம்மில் பலரும் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறோம். அளவுக்கு அதிகமாக மதுவை பயன்படுத்தும் போது கல்லீரல் அதிக பாதிப்படையும். இதனால் கல்லீரல் நோயின் கடைசி கட்டமான, மாற்று கல்லீரல் பொருத்தும் நிலையை அடைய வேண்டி வரும். மது சம்பந்தமான கல்லீரல் நோய்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இப்படிப்பட்ட நிலைகளில் கல்லீரல் முழுமையாக செயலிழந்து போகையில் மரணமே நேரிடும்.

உப்பு, சர்க்கரை, கொழுப்புக்களை குறைக்கவும்

குறைந்த கொழுப்பு, அதிக நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அதிகம் சேர்க்கவும். அதேப்போல் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ள நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்ளவும்.

மதுபானம்

நீங்கள் மதுபானம் குடித்தால், மிதமான அளவில் குடிக்கவும். பெண்களுக்கு மது மிக மெதுவாக செயல்முறையாகும். அதனால் மது சம்பந்தமான கல்லீரல் பாதிப்புக்கு அவர்கள் எளிதில் உள்ளாவார்கள்.

பயணம்

நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டால், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி-க்கான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.

வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள்

குழந்தைகளிடம் இருந்து மருந்துகள் மற்றும் ரசாயனங்களை (ப்ளீச் மற்றும் வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள்) எட்டாத உயரத்தில் வைத்திடுங்கள்.

மருந்துகள் மற்றும் மூலிகைகள்

மருத்துவரின் ஆலோசனையைப் பெறமால் மருந்துகளையும், மூலிகைப் பொருட்களையும் ஒன்றாக எடுக்காதீர்கள்.

கைகளை கழுவுங்கள்
குளியலறை/கழிவறைக்கு சென்ற பின்பு எப்போதும் கைகளை நன்றாக கழுவிடுங்கள்.
பூச்சிக் கொல்லி மருந்துகள்
களைச்செடிகளைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை ஸ்ப்ரே செய்யும் போது அவைகளை சுவாசிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி அவசியம்
முடிந்த வரை வெளியே சென்று உடற்பயிற்சி, விளையாட்டு (சைக்கிள் ஓட்டுவது போன்றவை) போன்றவைகளில் ஈடுபடுங்கள்.
டாட்டூக்கள்
உடலில் துளை போதுவது, டாட்டூ குத்துவது, மெனிக்யூர், பெடிக்யூர் கருவிகள் மற்றும் டாட்டூ மை போன்றவைகள் உங்கள் இரத்தத்தில் கலக்கும். இதனால் ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற தொற்றுக்கள் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவக்கூடும். இரத்தத்தில் இருந்து பரவும் இந்த தொற்றுக்கள் ஆபத்தான கல்லீரல் நோய்களை உண்டாக்கும். 
கூர்மையான பொருட்களை பகிர வேண்டாம்
ஊசிகள், சவரக்கத்தி போன்றவைகளை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதே போல் கூர்மையாக உள்ள ஊசிகள் மற்றும் ப்ளேட் ஆகியவற்றை முறையாக கழித்து விட வேண்டும். இல்லையெனில் அது யாரையாவது கிழித்து, விபத்தை ஏற்படுத்தி விடும்.
உடலுறவு
உடலுறவு ரீதியாக பரவக்கூடியவை ஹெபடைடிஸ் பி மற்றும் சி. ஹெபடைடிஸ் சி-யை விட ஹெபடைடிஸ் பி தான் அதிகமாக உடலுறவு மூலமாக பரவக்கூடியது.

 

Leave a Reply