உலகம் முழுவதும் பெருவாரியான மக்களை அச்சுறுத்தி வரும் எபோலா நோயை கட்டுப்படுத்த பிரபல இணையதளமான ஃபேஸ்புக், எபோலாவிற்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்த புதிய அமைப்பு ஒன்றை தனது வலைதளத்தில் ஆரம்பித்துள்ளது.
ஃபைட் எபோலா (Fight Ebola) என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்கின் முதல் பக்கத்தில் எபோலாவின் பாதிப்புகள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டிகள் ஆகிய விவரங்களை பதிவு செய்துள்ளது. மேலும் சர்வதேச மருத்துவ கழகம் மற்றும் குழந்தைகளை காக்கும் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புக்கும் ஃபேஸ்புக் பயனாளிகள் நேரடியாக ஆன்லைனில் 100 ரூபாய் முதல் தங்கள் விருப்பத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி அனுப்பும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பல கோடி வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஃபேஸ்புக் இதன்மூலம் மிகப்பெரிய தொகையை திரட்டி எபோலா நோயை கட்டுப்படுத்த உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை லைக், கமெண்ட், ஷேர் மட்டுமே செய்து வந்த தனது வாடிக்கையாளர்களை முதன்முதலாக நன்கொடை செய்யவும் வைத்துள்ளது. எபோலாவிற்காக ஃபேஸ்புக் ஆரம்பித்துள்ள நன்கொடை செலுத்தும் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/fightebola/