‘மே-14 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சிரமம்’. தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டே நடத்தப்பட வேண்டிய நிலையில் வழக்கு மற்றும் பல்வேறு காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், ‘மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று சமீபத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
ஆனால் மே 14ஆம் தேதிக்கு முன்பாகவே அதாவது ஏப்ரல்-24-ம் தேதியே தேர்தல் நடத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட மே-14 ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவதே சிரமம் என்றூம் மனுதாரரின் கோரிக்கைப்படி ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடத்த முடியாது’ என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் என தெரிகிறது