கர்நாடக தேர்தல் எதிரொலி: டிராவிட்டுக்கு கிடைத்த பதவி

கர்நாடக தேர்தல் எதிரொலி: டிராவிட்டுக்கு கிடைத்த பதவி

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கமிஷனின் பிராண்ட் அம்பாசிடர் பதவி ராகுல் டிராவிடை தேடி வந்துள்ளது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிராவிட்டை நல்லெண்ண தூதராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார், தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெங்களூரு போக்குவரத்து போலீசார் ராகுல் டிராவிட்டை வைத்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளம்பர படம் வெளியிட்டு இருந்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply