ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் யாருடையது? தேர்தல் ஆணையம் விசாரணை

ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் யாருடையது? தேர்தல் ஆணையம் விசாரணை

schoolதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ஒருபுறம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் பறக்கும் படையினர் மூலம் தேர்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 40 லட்ச ரூபாய் பணம் மற்றும் 125 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று காலை ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் 3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 245 கிராம் எடையுள்ள 125 தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் விஜயகுமாரி மற்றும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply