சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆப்பு. தேர்தல் ஆணையம் அதிரடி
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதலில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கைப்பற்றி காய்கள் நகர்த்தி வந்தார். அந்த திட்டமும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருந்தபோது நேற்றைய பேட்டி மூலம் சசிகலாவின் முதல்வர் கனவை ஓபிஎஸ் தகர்த்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது. அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிகளுக்கு முறையானது என்று கூறப்பட்ட புகாருக்கு தற்போது அதிமுக தலைமையிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாம்
இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்றும், அதிமுக-வின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலாளரை நியமிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.