தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை : தேர்தல் ஆணையம்

தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை : தேர்தல் ஆணையம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை என்ற சட்டம் இருந்த நிலையில் தற்போது தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை என்று வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், ‘குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதில், தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை. குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட சட்டப்படி தடை விதிக்கலாம் என பதிலளித்துள்ளது.

Leave a Reply