இலங்கையில் நாடு முழுவதும் திடீரென பொருளாதார எமர்ஜென்சி பிறப்பிக்கப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
அந்நியச் செலவாணி பற்றாக்குறை காரணமாக இலக்கையில் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே அமல்படுத்தியுள்ளார்.