விக்கிலீக்ஸ் அசாஞ்சேவின் இணையதொடர்பை திடீரென நிறுத்திய ஈக்வடார் தூதரகம்

விக்கிலீக்ஸ் அசாஞ்சேவின் இணையதொடர்பை திடீரென நிறுத்திய ஈக்வடார் தூதரகம்

assangeஅமெரிக்காவால் தேடப்படும் விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில் அவருடைய இணைய தொடர்பை ஈக்வடார் தூதரகம் துண்டித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவர் வெளியிட்டு கொண்டிருக்கும் ஒருசில ரகசியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ஈக்வடார் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில், ‘கிளிண்டனின் கோல்ட்மான் சாக்ஸ் பேச்சுகளை வெளியிட்ட பிறகு ஜி.எம்.டி. நேரம் 5 மணியளவில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் இணையத்தொடர்பு எந்த வித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்பட்டது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈக்வடார் தூதரகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதா அல்லது வாஷிங்டன் நெருக்கடிக்கு ஈக்வடார் தூதரகம் அடிபணிந்ததா, அல்லது வேறு ஏதாவது விவகாரமா என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை.

Leave a Reply