அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பிரிட்டன் பொதுத்தேர்தல் நேற்று பரபரப்பாக நடந்து முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குபதிவில் யாருக்கு வெற்றி என்பதைக் கணிக்க முடியாத வகையில் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள் பிரதமர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தொழிலாளர் கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எட்வர்டு மிலிபாண்ட் போட்டியிடுகிறார், இருவருக்கும் கடும்போட்டி நிலவுவதாக அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த தேர்தலில் இந்தியர்கள் வாக்குகள் முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 லட்சம் பேர்களும், இந்திய மாணவர்கள் மற்றும் குடியேற்றவாசிகள் என 6.15 லட்சம் பேர்களும் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
நேற்று காலை இந்த தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தாவுடன் ஆக்ஸ்ஃபோர்டுஷைர் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொழிலாளர் கட்சி பிரதமர் வேட்பாளர் மிலிபாண்டும், வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தனது மனைவியுடன் வாக்களித்தார்.
தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.