17ஆயிரம் கோடி மோசடி செய்த குற்றவாளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பா? அமலாக்கத்துறை அதிகாரி சஸ்பெண்ட்
ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரின் மனைவியுடன் அமலாக்கத்துறை அதிகாரி சுற்றி திரிந்ததாகவும், அவருடன் ஓட்டல் அறையில் தங்கியதாகவும் கிடைத்த தகவல் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ரோஸ் வேலி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் குண்டு என்பவர் கடந்ட்த 2015ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இவர் 17 ஆயிரம் கோடி ரூபாய் சீட்டுத் திட்ட மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை அதிகாரிகளில் ஒருவர் மனோஜ்குமார் என்பவர். இவர் குற்றம் சாட்டப்பட்ட கவுதம் குண்டுவின் மனைவி சுப்ரா குண்டுவுடன் பல இடங்களில் சுற்றியதாகவும், டெல்லியில் உள்ள விடுதி ஒன்றில் ஒரே அறையில் தங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக அந்த விடுதியின் சிசிடிவி கேமிரா வீடியோ உள்ளது.
குற்றவாளியின் மனைவியுடன் இந்த அதிகாரிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக காவல்துறைக்கு சந்தேகம் எழுந்ததால் அந்த விடுதியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே அமலாக்கத்துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுப்ரா குண்டுவுடன் ஓட்டலில் தங்கிய மனோஜ்குமார் நேற்று அந்த விசாரணை குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.