நிரவ் மோடி மோசடி எதிரொலி: சென்னையின் முக்கிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் ரூ.280 கோடி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.11,400 கோடி மோசடி என திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சி.பி.ஐ.யால் தேடப்படும் நகைக்கடை அதிபர் நிரவ் மோடி திடீரென வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் இந்திய பிரஜையே இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் வங்கியில் மோசடி செய்த விவகாரத்தில், நிரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள மூன்று முன்னணி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை இன்று அதிரடியாக சோதனை நடத்தியது.
சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிரவ் மோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தொடர்ந்து பறிமுதல் செய்து வரும் நிலையில் சென்னை நகைக்கடைகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.