யெஸ் வங்கியின் நிறுவனர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமா?

யெஸ் வங்கியின் நிறுவனர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமா?

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாராக் கடன் பிரச்சினையால் யெஸ் வங்கியின் முழு செயல்பாடும் இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து, ஒரு மாத காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மும்பை இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டதாகவும், ராணா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாத வகையில் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply