வீட்டை காலி செய். ஓபிஎஸ்-க்கு முதல்வர் பழனிச்சாமியின் பொதுப்பணித்துறை நோட்டீஸ்

வீட்டை காலி செய். ஓபிஎஸ்-க்கு முதல்வர் பழனிச்சாமியின் பொதுப்பணித்துறை நோட்டீஸ்

முதல்வராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு தனது துறையின் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அந்த நோட்டீஸில் ஓபிஎஸ் உடனடியாக தற்போது தங்கியிருக்கும் க்ரீன்வேஸ் சாலை வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் தனது குடும்பத்துடன் க்ரின்வேஸ் வீட்டில் வசித்து வரும் நிலையில் தற்போது சசிகலாவுக்கு எதிரணியில் இருப்பதால் அவரது ஆதரவாளரான முதல்வரின் துறையில் இருந்து நெருக்கடி கொடுக்கவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அவர்கள் உடனடியாக வீட்டை காலி செய்யாத பட்சத்தில் அவரது வீட்டில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நாளை ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமி வெற்றி பெற்றால் ஓபிஎஸ் தனது வீட்டை காலி செய்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply