பி.இ., படித்தவர்கள் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளராக வாய்ப்பு

download (3)

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் EDCIL (India) நிறுவனத்தில் உள்ள காலியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

1. Management Trainee (Technician) Civil Engineering:

10 இடங்கள்.

தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்.,

சம்பளம்: ரூ.16,400 – 3% – 40,500.

2. Management Trainee (Technical-Electronics & Communication Engineering):

10 இடங்கள்.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/ பி.டெக்.,

சம்பளம்: ரூ.16,400 – 3% – 40,500.

வயது வரம்பு: மேற்குறிப்பிடப்பட்ட 2 பணிகளுக்கும் 1.10.2015 தேதிப்படி 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசின் சட்ட விதிமுறைகளின் படியும் வழங்கப்படும்.

மொத்தம் உள்ள 20 காலியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 10 இடங்களும், எஸ்சிக்கு ஒரு இடமும், எஸ்டி பிரிவுக்கு 3 இடங்களும், ஒபிசியினருக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேட் – 2015 தேர்வில் வெற்றி பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் ‘அசிஸ்டென்ட் மேனேஜர்’ பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபசியினருக்கு ரூ.300 (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது). கட்டணம் செலுத்தும் முறையை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.

www.edcilindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். சான்றிதழ்களின் நகல்களை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2015.

 

Leave a Reply