டுவிட்டரில் எட்வர்ட் ஸ்னோடன். அதிர்ச்சியி அமெரிக்கா?

டுவிட்டரில் எட்வர்ட் ஸ்னோடன். அதிர்ச்சியி அமெரிக்கா?
snowden
அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்க அரசின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டிய எட்வர்டு ஸ்னோடன், இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார். அமெரிக்க அரசின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோடன் தற்போது ரஷ்யாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவ்வபோது பரபரப்பான செய்திகளை ரஷ்யாவில் இருந்து கொண்டே வெளியிட்டு வந்த ஸ்னோடன், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளதால் அவரிடம் இருந்து இனி அடிக்கடி பரபரப்பான செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்வர்ட் ஸ்னோடன் அவர்கள் @FreedomofPress என்னும் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தனது முதல் டுவீட்டாக “அரசுக்காக இதுவரை பணியாற்றிக்கொண்டிருந்தேன்.இப்போது மக்களுக்கு பணியாற்றுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவருடைய பக்கத்தை டுவிட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமான பக்கம் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்னோடனின் டுவிட்டர் பக்கத்தை கடந்த சில மணி நேரங்களில் ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். முதல் சில  மணி நேரங்களிலேயே அவரது பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை கடந்தது. மணிக்கு 3,000 பின் தொடர்பாளர்கள் என்னும் வேகத்தில் அவரக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இவ்வளவு அதிகமானோர் அவரை பின் தொடர்ந்தாலும் அவர் பின் தொடர்வது அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏவின் டுவிட்டர் கணக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னோடன் டுவிட்டரில் வந்துள்ளதால் இன்னும் அதிகளவில் அமெரிக்க ரகசியங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply