முட்டை தக்காளி குழம்பு

1393487555egg thakkali kulambu

தேவையானவை :

முட்டை – 2

நாட்டுத்தக்காளி – 3

வெங்காயம் – 2

மஞ்சள்தூள், சோம்பு கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்

பட்டை சிறிய துண்டு

முந்திரிப்பருப்பு – 4

தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் சிறிதளவு

செய்முறை:

சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை,வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி7 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

Leave a Reply