முட்டை – 3 (வெள்ளை கரு மட்டும்)
கோதுமை மாவு – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
• கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• முட்டையின் வெள்ளை கருவில் உப்பு, மிளகாய் தூள், வெண்ணெய், மஞ்சள் தூள்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.
• மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு பாதி வெந்ததும் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். வெந்ததும் திருப்பி போட்டு மீண்டும் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
• சுவையான சத்தான முட்டை சப்பாத்தி ரெடி.