கண்ணியத்துடன் இந்திய கடற்படை. மிருகத்தனத்துடன் இலங்கை கடற்படை.

கண்ணியத்துடன் இந்திய கடற்படை. மிருகத்தனத்துடன் இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் மிருகத்தனமான துப்பாக்கியால் இலங்கை கடற்படையினர் சுட்டு வரும் நிலையில் அதே எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கண்ணியமாக நடந்து கொண்டதை சென்னை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 10 பேர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 பேர்களும் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இலங்கை மீனவர்களிடம் ”இந்தியக் கடற்படையினர் உங்களைத் தாக்கினார்களா” என்று நீதிபதி சந்திரன் கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை’ என்றும், இந்தியக் கடற்படை கண்ணியமாக நடந்துகொண்டதாகவும் நீதிபதியிடம் கூறினர்.

அப்போது நீதிபதி ‘எங்கள் அதிகாரிகள் கண்ணியமாக நடந்துகொள்ளும்போது, உங்கள் அதிகாரிகள் மட்டும் ஏன் எங்கள் மீனவர்களைச் சுடுகின்றனர்’ என்று கூறியதோடு, இந்தியக் கடற்படையின் கண்ணியம் குறித்து, உங்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுங்கள் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களை வரும் 23-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply