ரூ.734.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம்
ரூ.734.90 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது
புதுப்பிக்கப்பட்டவுடன் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையானது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் கிளம்பி செல்கின்றன.
இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.90 கோடி மதிப்பில் கண்கவர் ஓவியங்கள் மின்சார நகர்வு படிக்கட்டுகள் நுழைவாயில் பயணச்சீட்டு வழங்கும் இடங்கள் என புதுப்பிக்கப்படவுள்ளது.